தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணக்கம்; தேர்தல் பங்கீடு விபரமும் வெளியிடப்பட்டன!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் நிலவிய ஆசனப்பங்கீட்டு சிக்கலிற்கு நேற்று தீர்வு காணப்பட்டு எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடந்த கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டன.

நேற்று காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை நடைபெற்ற இச்சந்திப்பில எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநான், சிறிகாந்தா, முன்னாள்  கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் ரெலோ உபதலைவருமான கென்றி மகேந்திரன் வியாழேந்திரன், சுமந்திரன், ஆர்.இராகவன், , விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம்  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மாவட்டரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ள ஆசனப்பங்கீட்டு விபரம் இதுதான்.

யாழ்ப்பாணம்

நெடுந்தீவு, ஊர்காவற்றுறைஇ காரைநகர்இ வல்வெட்டித்துறை நகரசபை என்பன ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ளன. வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும், அங்கு 40% வேட்பாளர்களும்.

யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் ரெலொவிற்கு.

நல்லூர் பிரதேசசபைஇ வலி கிழக்குஇ கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபையும் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா இரண்டு வருடம் பங்கிடுவார்கள். நல்லூர்இ கரவெட்டி தெற்கு மேற்கு முதல் இரு வருடம் தமிழரசுக்கட்சிக்கு. இந்த மூன்று சபைகளில் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா 40% 20% புளொட்டிற்கு.

அம்பாறை

திருக்கோவில், காரைதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. கல்முனை  தலைமை ரெலோவிற்கு. அங்கு கிடைக்கும் 8 உறுப்பினர்களில் 5 ரெலோவிற்கும், 3 தமிழரசுக்கட்சிக்கும். நாவிதன்வெளி. ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிக்கு.

கிளிநொச்சி

கிளிநொச்சியின் மூன்று சபைகளான கரைச்சி பூநகரி, பச்சிலைப்பள்ளி மூன்று சபைகளின் தவிசாளர்களும் தமிழரசுக்கட்சி. ரெலோவிற்கு மூன்றின் தவிசாளர்களும். இங்கு தமிழரசுக்கட்சிக்கு 60%, மற்றைய இரண்டு பங்காளிகளிற்கும் தலா 20% ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியா

நெடுங்கேணி பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு. வவுனியா நகரசபை மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் புளொட். வவுனியா தெற்கு பிரதேசசபையை ரெலோ, புளொட் தலா இரண்டு வருடங்கள் பங்கிடும். யார் முதலில் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. செட்டிக்குளம் பிரதேசசபை ரெலோவிற்கு.

மன்னார்

மன்னாரில் மன்னார் நகரசபைஇ மாந்தை மேற்கு ரெலோவிற்கு. மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு.

மட்டக்களப்பு

களுவாஞ்சிக்குடி, போரதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. மட்டு நகரசபை பிரதிமேயரும் ரெலோவிற்கு. செங்கலடி, ஆரையம்பதி பிரதேசசபைகள் ரெலோ, புளொட் பங்கிடும். ஏனைய சபைகள் தமிழரசுக்கட்சிக்கு.

 

முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு தமிழரசுக்கட்சி. கரைத்துறைப்பற்று பிரதேசசபை ரெலோ, புளொட் பங்கிடும். உப தவிசாளர் தமிழரசுக்கட்சிக்கு. மாந்தை கிழக்கு ரெலோ, துணுக்காய் தமிழரசுக்கட்சிக்கு.

திருகோணமலை

அங்குள்ள மூன்று சபைகளிலும் தமிழரசுக்கட்சியே தவிசாளர் பதவியையும்இ உப தவிசாளர் பதவிகளையும் பெறும். ஏனைய கட்சிகளுடன் பேசிஇ உறுப்பினர்களை நியமிக்கலாமென முடிவாகியுள்ளது.

 

By admin