பெரியநீலாவணை சமூகநல அபிவிருத்தி மன்றத்தினரால் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி பயில்கின்ற தாய் அல்லது தந்தை இழந்த வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு; 2017-12-08 வெள்ளிக்கிழமை  பெரியநீலாவணை கமு\ விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

மன்றத்தின் தலைவர் மு.டினோசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை தமிழ் மொழி பாட உதவி வலயக்கல்வி பணிப்பாளரும், இவ் அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போது இவ் அமைப்பின் ஆலோசகருமான க.வரதராஜன், மற்றும் பாடசாலையின் முதல்வர் மற்றும் பிரதிஅதிபர் மற்றும் இவ் அமைப்பின ஆலோசகர் யோகராஜா, செயலாளர் பிரதீபன், பொருளாளர் சஜாந்தன், கணக்காய்வாளர் ராகுலன் போன்றவர்களுடன் இப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இப்பாடசாலை அனைத்து மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர் இப் பாடசாலை உபகரணங்கள் இவ் அமைப்பின் செயலாளர் பிரதீபன் அவரின் நிதியிலிருந்து வழங்கப்பட்டது .

 

 

 

By admin