கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இதய மீள உயிர்ப்பித்தல் பயிற்சிப் பட்டறை!

“ஒரு நொடியில் உயிரை எவ்வாறு மீள உயிர்ப்பிக்கலாம்” இச் செயல்பாடு சகல வைத்திய சாலைகளிலும் ஆபத்தான வேளையில் நடைபெற்று வருகின்ற போதிலும், இதை மிக நேர்த்தியாக எவ்வாறு மேன்படுத்தலாம் என்ற ரீதியில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் ,வைத்தியர் தேவகுமார் (மயக்க மருந்து நிபுணர் ) வைத்தியர் றமேஸ் (பொது வைத்திய நிபுணர்) வைத்தியர் இதயகுமார் (பொது வைத்திய நிபுணர்) ஆகியோரின் பங்களிப்புடன்  பயிற்சிப்பட்டறை நேற்று ஆரம்பமானது நிகழ்வை பிரதம முகாமைத்துவ உதவியாளர் தேவஅருள் தொகுத்து வழங்கினார்.

பயிற்சிப்பட்டறை யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் (லண்டன் ) நடத்தப்படுகிறது. இதற்காக திரு திருமதி வேலுப்பிள்ளை ஆகியோருடன் லண்டனில் இருந்து வைத்திய குழுவினரும் வருகை தந்தமை சிறப்பாகும்..

இரண்டு நாட்கள் பட்டறை நடைபெறும் என வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும் ” நாளாந்தம் வைத்திய துறை மிக வளர்ச்சி கண்டு வருகின்றது எனவே எமது நிபுணர்கள் மட்டும் தங்களின் திறமைகளினால் எல்லாவற்றையும் செய்ய முடியாது ஆகவே குழு வேலை மூலம் நாம் அவர்களின் திறமைக்கு உறுதுணையாக வைத்தியர்கள் தாதியர்களின் பங்களிப்பு மிக அவசியம்.ஆகவே நாம் நாளாந்தம் எமது திறமைகளை புதுப்பித்துக்கொள்ளல் அவசியம் .இவ்வாறான நிகழ்வுகள் மூலம் அதை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

வைத்தியர் வேலுப்பிள்ளை அவர்கள் கூறுகையில் “நாம் எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் நாமும் இன்னும் திறமைகளை பெறமுடியும். எனவே இவ்வாறு செய்வது பலரிற்கும் நன்மை என கூறினார்.

பயிற்சிகள் இன்றும் நடைபெற்று (06/12/2017) கௌரவிப்பு நிகழ்வுடன் நிறைவுபெறும்.

By admin