இலங்கையில் தொடந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை 7 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

179 குடும்பங்களை சேர்ந்த 1036 பேர் 9 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை பிரதேசத்தில் 4 நலன்புரி நிலையங்களிலும், களுத்துறை பிரதேசத்தில் 3 நலன்புரி நிலையங்களிலும், வெலிமடை மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தில் இரண்டு நலன்புரி நிலையங்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் மழை பெய்தமையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் முழுமையாக 202 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அவற்றில் 157 வீடுகள் களுத்துறை பிரதேசத்தில் உள்ளவைகள் என குறிப்பிடப்படுகின்றது. மேலும் 3250 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையின் தாக்கம்  குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

By admin