அண்மைக்காலமாக பல வைத்தியசாலைகளில் ஏற்பட்டுவரும் பொதுமக்களுக்கும் சுகாதார சேவையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை கருத்திற் கொண்டு முன்னேற்பாடாகவும் சேவைநாடிகளின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என தெளிவுபடுத்தும் கருத்தரங்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் சுகாதார கல்விப்பிரிவினூடாக கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்றது.

 

எமது வைத்தியசாலை மிகச்சிறப்பாக சேவையாற்றுகின்ற போதிலும் நோயாளர்களின் அடிப்படை உரிமைகள் சேவையாளர்களின் அடிப்படை உரிமைகள் என்பவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு எமக்குள்ளது எனவே நீங்கள் எவ்வாறு சேவைநாடிகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்துகொள்வதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காகவே இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுவது முக்கியம் என வைத்தியர் முரளீஸ்வரன் தலைமை உரையில் குறிப்பிட்டார்.

கல்முனைப் பிராந்திய மனித உரிமை ஆணையாளரினால் மிகச் சிறந்த கருத்துக்களுடன் முன்னிலைப்படுத்தப்பட்டது. அவர் எனதுரையில்….

இந்து சமயம் அடிப்படை மனித உரிமைகளை காப்பதில் சிறப்பான கருத்துக்களை கூறியுள்ளதாகவும் இராமயணத்தில் இராமர் இராவணனின் நிலைகண்டு “இன்று போய் நாளை வா”என கூறி இராவணனின் சுய கௌரவத்தை மதித்து அடிப்படை மனித உரிமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இது போன்ற பல உதாரணங்களுடன் தெளிவான கருத்துக்களுடன் இன மத ஜாதி மொழி வேறுபாடின்றி எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.ஒவ்வொரு பிரஜையும் ( சேவைநாடிகள் ) எவ்வாறு சுய கௌரவத்துடன் நடாத்தப்படுகின்றனரோ அதுவே அடிப்படை மனித உரிமை என மிகத் தெளிவாக விபரித்தார் .

வைத்திய அத்தியட்சகர் சேவைநாடிகளினதும் சேவையாளர்களினதும் அடிப்படை மனித உரிமையை பாதுகாப்பதில் மிக அக்கறை கொண்டுள்ளார் . எமது பிராந்தியத்தில் இவ்வாறான தலைமைத்துவத்தை பாராட்டப்பட வேண்டிய அவசியம் எனக்குண்டு அத்துடன் இவ்விஷயத்தில் அவர் மிகுந்த ஆர்வமாகவுள்ளார். என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன் என கூறினார். சுகாதார கல்விப்பிரிவினால் கல்முனை மனித உரிமை ஆணையாளரிற்கு நன்றியுரை வழங்கப்பட்டது.

By admin