லண்டன் :  இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க டிவி சீரியல் நடிகை மெகன் மார்க்கலை திருமணம்செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி (33) அமெரிக்காவை சேர்ந்த டிவி சீரியல் நடிகை மெகன் மார்க்கலைகாதலிப்பதாக பேசப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் கைகோர்த்து ஜோடியாக சென்றதைபார்த்தவர்கள் இது காதல் தான் என்றனர்.

இந்நிலையில் ஹாரிக்கும், மெகனுக்கும் நிச்சியதார்த்தம் நடந்துவிட்டது என்றும் அவர்களின் திருமணம்அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கும் என்றும் அரண்மனை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹாரி, மெகனுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு மெகன் ஹாரியுடன் இங்கிலாந்தில் வசிப்பாராம். 36வயதாகும் மெகனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக அவர் கடந்த 2011ம் ஆண்டுடிரெவர் எங்கல்சன் என்பவரை திருமணம் செய்து 2013ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.