கல்முனை மாநகரசபை விவகாரம் தொடர்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று (28.11.2017) பி.ப மூன்று மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கல்முனை பிரிப்பு தொடர்பில் தமிழ் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், கல்முனை பிரதேச தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதனால் கல்முனை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் அனைவரையும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைக்குமாறு கல்முனை தொகுதி தமிழரசுக்கட்சியின் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

By admin