(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவில் தமிழரசுக்கட்சிகாரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் மாவீரர்தினம் சிறப்பாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.
முன்னதாக ஈகைச்சுடரேற்றி 3நிமிடநேரம் மௌனாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து கி.ஜெயசிறில்  தலைமையில் உணர்வுபூர்வமாக மாவீரர்தின உரைகள் நிகழ்த்தப்பட்டன.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தமிழரசுக்கட்சிகாரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் ஆசிரியர் கஇநாகராசா ஆகியோர் உரையாற்றினர்.
மாவீரர் பெற்றோர்கள் மனைவிமார் இளைஞர்கள் போராளிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சிவநேசன்(பத்தன்)என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

By admin