கல்முனை பிரதேசமெங்கும் மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு!

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு கார்த்திகை 27 ஆம் நாள் நேற்று கல்முனை பிரதேசத்தில் பரவலாக உணர்வெழுச்சியுடன் அஞ்சலிசெலுத்தப்பட்டன.

கல்முனை, கல்முனைநகர், நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலயம், கல்முனை கடற்கரை ஆகிய இடங்களில் மாவீர்களுக்கு நினைவேந்தல் சுடரேற்றி பொதுமக்களாலும் பிரதேச இளைஞர்களாலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்ப்பட்டன.

நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில்….

நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் . தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாட்டுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது;. இதில் மாகாணசபை உறுப்பினர் மற்றும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தத்தர்களில் ஒருவரான ஜெயசிறில் பொதுமக்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

கல்முனை நகரில்….

கல்முனை பிரதேச இளைஞர்களால் கல்முனை மாநகரிலுள்ள அம்மன்கோவில் சந்தி முன்றலில் ஈகைச்சுடரேற்றி மௌனாஞ்சலி உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டதுடன்
கல்முனை நகர மத்தியின் அம்மன் கோவில் வீதி மற்றும் அக்கரைப்பற்று பிரதான வீதிகள் இணையும் சந்தியான கல்முனை நகர் பேரூந்து நிலையம் முன்பாக நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் மாவீரர் நாள் சுடர் சுடரேற்றி மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தமிழரசுக்கட்சி காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் பொதுமக்கள் இளைஞர்கள் என பெருமளவானோர் பங்குபற்றி அஞ்சலி செலுத்தினர்.

கல்முனை கடற்கரையில்……

கல்முனை கடற்கரையிலும் மாவீரர் நினைவாக மாதிரி கல்லறை உருவப்படங்கள் வைக்கப்பட்டு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin