ஒரு­காலை இழந்த நிலை­யிலும் நம்­பிக்­கையைத் தள­ர­வி­டாது ஒற்றைக் காலில் கால்­பந்து விளை­யாடும் சீன வீரர் ஒரு­வரின் காணொளி தற்­போது வைர­லா­கியுள்ளதைத் தொடர்ந்து விளை­யாட்டு உலகம் அவர் பக்கம் திரும்­பி­யுள்­ளது.

ஹீ யியி என்ற 21 வய­தாகும் மாற்றுத் திற­னாளி கால்­பந்து வீர­ரான இவர், புற்று நோயின் கார­ண­மாக சிறு வயதில் தனது இடது காலினை இழக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு ஆளா­கினார்.

தற்­போது ஊன்றுகோல் மூலம் கால்­பந்துப் போட்­டி­களில் விளை­யா­டி­வரும் ஹீ, “ சிற­கு­களை இழந்த தேவதை (Angel with Broken Wings) “, “ ஒற்றைக் காலு­ட­னான கால்­பந்து ராஜா” (Ball King with One Leg)” மற்றும் “மாய­ாஜாலப் பையன் (Magic Boy)” போன்ற பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்றார்.

கண்­காட்சிக் கால்­பந்துப் போட்­டி­யொன்றில் ஹீ விளை­யா­டிய காணொளி தற்­போது வைர­லாகி இருக்­கின்­றது.

அந்த காணொ­ளியில் இவர் நுணுக்­க­மாக பந்­தினை எடுத்துச் செல்­வது, ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி வீர­ராக அவர் எதிர்­கொள்ளும் சவால்­களை அவரே கூறு­வது போன்ற காட்­சிகள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. அத்தோடு குறித்த காணொளியினை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரையில் பார்வையிட் டுள்ளனர்.