(துறையூர் தாஸன்.)

கிழக்குப் பல்கலைக்கழக செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்,வைத்திய
கலாநிதி கு.மயூரேஷனின் ஒழுங்கமைப்பில்,செளக்கிய விஞ்ஞான பீட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

நீரிழிவும் சமூகம் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி க.அருளானந்தமும் கர்ப்பமும் சர்க்கரையும் எனும் தலைப்பில் வைத்திய நிபுணர் மா.திருக்குமாரும் உணவே ஓளடதமாக எனும் தலைப்பில் வைத்திய நிபுணர் க.த.சுந்தரேசனும் நீரிழிவும் ஐதீகமும் ஐயந்தெளிதலும் எனும் தலைப்பில் வைத்திய நிபுணர் ம.உமாகாந் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக வளவாளராக கலந்து கொண்டு நீரழிவு தொடர்பான நடைமுறை சாத்தியப்பாடுகளை இதன்போது தெளிவுபடுத்தினர்.

கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி டாக்டர் கே.ஈ.கருணாகரன்,பீடாதிபதி டாக்டர் அஞ்சலா அருட்பிரகாசம்,செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட வைத்திய நிபுணர்கள், விரிவுரையாளர்கள்,வைத்திய பீட மாணவர்கள்,பொதுமக்கள்,சமூக மட்ட அமைப்புகள் ஆகியோர் இதன்போது பங்குகொண்டனர்.

By admin