(துறையூர் தாஸன்.)

இலங்கை மத்திய வங்கியின் கல்முனை மக்கள் வங்கி கிளையின் ஏற்பாட்டில்,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கு நிதிசார் நிபுணத்துவம் தொடர்பான செயலமர்வு,பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (21) இடம்பெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பின் நுண்கடன் பிரிவின் பொறுப்பாளர் ஆர்.சிறிபத்மநாதன் வளவாளராக கலந்துகொண்டார்.

சுய தொழிலில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல்,நாணயங்களின் உண்மை விபரம்,முறை சாரா நிதி நிறுவனங்களில் நிதி பெற்றுக்கொள்வதை தவிர்த்தல், நிதிச் சேவைகள்,கடன் வசதிகள் ஆகிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது

கல்முனை மக்கள் வங்கி உதவி முகாமையாளர் எம்.சாதிக்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ராஜகுலேந்திரன்,செயலக கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.சசிதரன்,உத்தியோகத்தர் பா.அஜந்  ஆகியோரும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

 

By admin