அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் மாவட்ட மட்ட கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கல்முனையில் நடாதத்தப்படவுள்ளது.

கல்முனை நால்வர் கோட்ட மண்டபத்தில் நாளை 25 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெறும் இக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தன்,  தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும்  கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

இக்கலந்துரையாடலின்போது கல்முனை விவகாரம் தொடர்பாகவும் நேரம் ஒதுக்கி கலந்துரையாடப்படவேண்டும் என்று கல்முனை பிரதேச மக்கள் கோருகின்றனர்.

(சௌவியதாசன்)

By admin