காரைதீவு பிரதேச சபையில் இதுவரை காலமும் பிரதேச சபை செயலாளராக கடமையாற்றிய சின்னத்தம்பி  நாகராஜா  கிழக்குமாகாண ஆளுனர்  ரோஹிதபோகல்லாகமவின் உத்தரவின்பேரில் கட்டாய இடமாற்றத்துக்கு அமைய இடமாற்றம் பெற்று திருக்கோவில் பிரதேச சபை செயலாளராக செல்வதை முன்னிட்டு அவருக்கான காரைதீவு பிரதேச சபை ஊழியர்களின் பிரியாவிடை நிகழ்வும் புதிய செயலாளரை வரவேற்க்கும் நிகழ்வும் காரைதீவு பிரதேச சபையில்  நேற்றுஇடம் பெற்றது.

காரைதீவுப் பிரதேசசபைச்செயலாளராகவிருந்த சி. நாகராஜா கடந்த 28வருடங்களாக அரசேவையில் உள்ளவர். தற்போதுவயது 59. அடுத்தவருடம் ஓய்வுபெறவிருந்தவர்.காரைதீவு பிரதேசபையில் கடந்த 07வருடங்களாக சேவையாற்றிவருகிறார். இவரொரு சிறந்த கவிஞரும் ஊடகவியலாளருமாவார்.

காரைதீவு பிரதேச சபையின் புதிய செயலாராக இதுவரை காலமும் திருக்கோவில் பிரதேச சபையில் கடமையாற்றிய  காரைதீவைச் சேர்ந்தஅருணாசலம் சுந்தரகுமார்  தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

(காரைதீவு நிருபர் சகா)

 

By admin