சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  சேவையாற்றிய ஆசிரியைகளான திருமதி பி.ரவிஸ்கரன், திருமதி.பா.வதனா மற்றும் திருமதி கலைவாணி சுதாகரன் ஆகியோர்களுக்கான சேவை நலன் பாராட்டு வைபவமான, வித்தியாலய முதல்வர் திரு பொ.கமலநாதன் அதிபர் தலைமையில் கடந்த 22.11.2017 ம் திகதி திரு.என்.சிவநேசன்  ( பிரதியதிபர் ) இ ஜனாப் எஸ்.எல்.எம்.பரீட்இ திரு ரி.குவேந்திரன் ஆகியோரினால் இனிதே நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வின் போது பாடசாலைக்கு புதிதாக வருகைதந்த ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டதுடன். கடமையாற்றி சென்ற ஆசிரியர்களுக்கு நினைவு சின்னங்கள் வழங்கியும் வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக கமு/ சது/ கோரக்கர் வித்தியாலய பிரதியதிபர் திரு எஸ்.இளங்கோபன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

By admin