காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்  மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரது இடத்தை நிரப்புவதற்கு பதில் கடமை பிரதேச செயலாளராக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதில் கடமை கட்டளையானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து இன்றைய  23 தினம் கடமையை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிரந்தரமாக பிரதேச செயலாளர் நியமிக்கப்படும்வரை திரு லவநாதன் பதில் கடமையாற்றுவார்.

காரைதீவு நிருபர் சகா

By admin