(காரைதீவு   நிருபர் சகா)

கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் தலைவர்களது
உயர்மட்டச்சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனது அலுவலகத்தில்
நேற்று  22ஆம் திகதி புதன்கிழமை மாலை4.30மணியளவில் ஆரம்பித்து
6.30மணியளவில் தீர்வின்றி முடிவுற்றது.

கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரத்தை தீர்க்குமுகமாக தமிழ் மற்றும்
முஸ்லிம் தரப்பிலிருந்து 5பேர் கொண்ட இருகுழுக்கள் அமைக்கப்படவேண்டும்மென்றும் அவர்கள் இதனையிட்டு தொடர் கலந்துரையாடல்களை நடாத்தி நிரந்தரமான சமாதானமான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு பெற ஒத்துழைக்க வேண்டுமென்றும்
கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரம் தொடர்பாக உள்ளுராட்சி மாகாணசபைகள்
அமைச்சர் பைசர்முஸ்தபா கூட்டியகூட்டம் அண்மையில்  கொழும்பிலுள்ள அமைச்சு
அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தமை தெரிந்ததே. அதற்கமைய இந்த இரண்டாம்கட்டக் கூட்டம் நேற்று  நடைபெற்றது.

தமிழர்தரப்பிலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை
சேனாதிராஜா எம்.பி., ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி., மற்றும்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ,ரெலோ கட்சியின்
உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான
ஹென்றிமகேந்திரன், இலங்கைத்தமிழிரசுக்கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம்,
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்ட பிரமுகர்கள்
கலந்துகொண்டனர்.

முஸ்லிம்கள் தரப்பில் அமைச்சர் ஹக்கீம் பிரதியமைச்சர், ஹரீஸ், முன்னாள்
அமைச்சர் அதாவுல்லா ,மற்றும் அசாத் சாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருதுபிரிப்பதில்  தமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லையெனக்கூறிய
தமிழ்ர்தரப்பினர் கல்முனை நான்காகப்பிரிப்பதில் தமிழ்மக்கள்
பாதிகப்படைவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றனர்.

இறுதியில் இரு தரப்பினதும் முன்மொழிவுகளை பரிமாறிக்கொண்டு இறுதி
கூட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடாத்துவதென
தீர்மானிக்கப்பட்டது.

By admin