(காரைதீவு  நிருபர் சகா)

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை தரம் 1ஜச் சேர்ந்த நிருவாக அதிகாரியான இவர் நிருவாகசேவையில் 13வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் 2003இல் பட்டிப்பளை பிரதேச செயலாளராக பதவியேற்ற பின்னர் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.

அதன்பிறகு உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று ஜப்பானுக்கு சென்று இருவருடங்கள் சர்வதேச விவகாரத்தில் முதுமாணி பட்டம் பெற்று 2014 இல் நாடு திரும்பினார்.

பின்பு காரைதீவு பிரதேச செயலாளராக நியமனம் பெற்றார். அங்கு நேற்றுவரை 3வருடங்கள் 3மாதங்கள் சிறந்த சேவையாற்றியிருந்தார்.

காரைதீவில் கொம்புமுறி விளையாட்டு முதல் பல புது மாற்றங்களுடன் நல்லநிருவாகியாகசேவையாற்றிருந்ததுடன் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் காரைதீவுக்கான பிரதேச செயலாளர் யார் என்பதுகுறித்து இன்னும் தெரியவரவில்லை.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இதுவரை யாரும் பதவியேற்கவில்லை என்பதும் இன்றையநிலையில் அங்கு அரசாங்க அதிபரோ மேலதிக அரசாங்க அதிபரோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க் கிரான் பிரதேச செயலாளராகவிருந்து அண்மையில கிரான் பிரதேச செயலாளராக இடமாற்றம்பெற்ற எஸ்.தனபாலசிங்கம் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By admin