(காரைதீவு நிருபர் சகா)
 
தரம் 5 இல் பயிலும் பத்துவயதுடைய மூன்று மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சம்மாந்துறை பாடசாலையொன்றைச்சேர்ந்த அதிபர் ஒருவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
பிரஸ்தாப அதிபர் கடந்த காலங்களில் இம் 3 மாணவிகளையும் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடடின்பேரில் நேற்று குறித்த அதிபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு. இவர் நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இவருடைய ஆரம்பக்கட்ட விசாரணைகளை நேற்று மேற்கொண்ட சம்மாந்துறை நீதிவான்நீதிமன்ற நீதிபதி எச்.எம். மொகமட் பஸீல் குறித்த அதிபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் குறித்த அதிபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உதவியுடன்  விசேட சட்டவைத்திய அதிகாரியிடமும், மனநோய்மருத்துவரிடமும் அவர் தொடர்பான அறிக்கைகளைப் பெறுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

By admin