சென்ற வருடம் உற்பத்தி திறன் தரப்படுத்தலில் கல்முனை ஆதார வைத்தியசாலை தேசியமட்டத்தில் 3ம் இடத்தை பெற்றது. இதனை விஸ்தரிக்கும் முகமாக இங்கு பல நிகழ்வுகள் தொடராக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களினால் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றது.

அந்த வகையில் வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விஷேடவகுப்புகள் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

வைத்திய அத்தியட்சகர் அவர்களினால் முதலாவது பிரிவினருக்கான விஷேட வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலாகவும் இந்த வகுப்பு சிறப்பாக நடைபெற்றிருந்தது.  இதில் விருது மட்டும் நோக்கமல்ல ஒவ்வொரு இழப்பையும் முடிந்தவரை தடுக்கலாம் என கூறினார். சிறப்பான விடயமாக அன்பு, தலைமைத்துவம், அரவணைப்பு, கண்டிப்பு அனைத்தும் கலந்த விதமாக நட்புறவுடனான பல கருத்துக்கள் பாராட்டுதல்களுடன் தனது வழமையான பாணியில் வைத்தியசாலையின் தகவல்களை உத்தியோகஸ்தர்கள் அறித்திருக்கும் வகையில் கேள்வி விடைகளுடன் இந்த வகுப்பினை நடாத்தியிருந்தார்.

அத்துடன் 5s நடைமுறையில் சிலர் காட்டும் அதிருப்தியை சுட்டிக் காட்டும் விதமாக தனது ஆளுமை மூலம் தாபன விதிக்கோவையின்  ” பதவி விலக்கல் ” என்ற தலைப்பை திரையிலிட்டு காண்பித்து மிக எளிமையான முறையில் அவர்களை திசைதிருப்பும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார். இது ஓர் வித்தியாசமான பாணியிலான செயல்திட்டம் என்றே கருதவேண்டுயுள்ளது.

மேலும் இதே போலான பல வடிவங்களில் பல துறையினரை கொண்டு விஷேட வகுப்புகள் நடாத்துவதும் ஓர் சிறப்பம்சம்.

இதே வகையில் சில மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ் சிவபாலன் அவர்களினால் நடாத்தப்பட்ட “மனமாற்றம்”என்ற தலைப்பிலான சிறப்பு கருத்துரைக்கு ஒப்பாக அமைந்துள்ளது என அனைவரும்  கருத்து தெரிவித்தனர்.

By admin