கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் தலைவர்களது அடுத்தகட்ட உயர்மட்டச்சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனது அலுவலகத்தில்  இன்று  22ஆம் திகதி புதன்கிழமை மாலை 3மணிளவில் நடைபெறவுள்ளது.

 

கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரத்தை தீர்க்குமுகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பிலிருந்து 5பேர் கொண்ட இருகுழுக்கள் அமைக்கப்படவேண்டும்மென்றும் அவர்கள் இதனையிட்டு தொடர் கலந்துரையாடல்களை நடாத்தி நிரந்தரமான சமாதானமான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு பெற ஒத்துழைக்க வேண்டுமென்றும்  கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரம் தொடர்பாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபா கூட்டியகூட்டம் அண்மையில்  கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தமை தெரிந்ததே.

அதற்கமைய இந்த இரண்டாம்கட்டக் கூட்டம் இன்று  நடைபெறவிருக்கிறது. அதனிடையில் இருதரப்பிலுமிருந்து தெரிவாகும் ஜவர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுவருகின்றது.

 

தமிழர்தரப்பிலிருந்து தெரிவான ஜவர்கொண்டகுழுவின் விபரம் வருமாறு:

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி. மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..

 த.தே.கூட்டைப்பு பங்காளிக்கட்சிகட்சிகளின் கூட்டம்!

 

இதேவேளை உள்ளுராட்சித் தேர்தல் பங்கீடு குறித்து த.தே. கூட்டமைப்பு கட்சிகளிடையே கலந்துரையாடல் இன்று  (22) மாலை 6 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கலந்துரையாடலை  நடாத்தவிருக்கின்றன.

இந்தப்பேச்சுவார்த்தையில் தமிழரசுக்கட்சி ரெலோ புளொட் ஆகிய பங்காளிக்கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன. எதிர்வரும் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்படுவதுடன் கட்சிகளிடையே ஆசனப்பங்கீடுகள் தொடர்பாகவும் இறுதி முடிவெடுக்கப்படவிருக்கின்து.

 

இ.த.அ.கட்சி ரெலோ முதற்கட்டப்பேச்சுவார்த்தை!

முதற்கட்டமாக கடந்த  (17) இலங்கைத்தமிழரசுக்கட்சி ரெலோ ஆகிய கட்சி பிரமுகர்களிடையே பேச்சவார்த்தை கொழும்பிலுள்ள பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவரலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைத்தமிழரசுக்கட்சி சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமனற் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம்.எ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரெலோ சார்பில் அதன் செயலாளர்நாயகம் சட்டத்திரணி என்.ஸ்ரீகாந்தா உபதலைவர்களான ஹென்றிமகேந்திரன் இந்திரகுமார் பிரசன்னா தலைமைக்குழு உறுப்பினர்களான விநோநோகராதலிங்கம் என்.சுரேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்க கிழக்கில் ரெலோ கட்சிக்கான ஆசனப்பங்கீடு மற்றும் சபைகளின் தலைமை தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் 5சபைகளின் தவிசாளர் பதவியையும் கிளிநொச்சியிலும் திருகோணமலையிலும் தலா ஒரு  தவிசாளர்பதவியையும் மட்டக்களப்பு மாகரசபையில் ஒரு முதல்வர் உள்ளிட்ட 3 உறுப்பினர்களையும் அம்பாறையில் திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய இரு சபைகளின் தவிசாளர்களையும் தமக்குத்தரவேண்டும் என ரெலோ கோரிநிற்கின்றது.

இருதரப்பும் இணக்கப்பாட்டுடன் சுமுகமான முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும்இன்று  இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தையில்தான் இறுதிமுடிவு எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.

 

 

(காரைதீவு  நிருபர் சகா)

By admin