கல்முனையைச்சேர்ந்த குறும்பட இயக்குனர் ஜோயல் J.Rன் அடுத்த குறும்படமான The Queen குறும்படத்தின் first look  வெளிவந்துள்ளது.

செல்வகுமார் தயாரிக்கும் இக்குறும்படத்தில் நாயகன் அஜய் பெண்ணாக நடித்துள்ளார். நெஹேமியா ரொஜர் இசையமைக்க மனோஜிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பினை ஜோயல் மற்றும் மனோஜிதன் கையாண்டுள்ளர். இது ஜோயல் இயக்குகின்ற அவரது 13வது குறும்படமாகும். படத்திற்கான ஒப்பனையை கவிப்பிரியன் செய்துள்ளார்.

ஜோயல் குழுவினர் தயாரித்துள்ள பல குறும்படங்கள் தேசிய ரீதியில் விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

By admin