(டினேஸ்)

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் தேசிய மாவீரர் கார்த்திகை 27 நாளினை முன்னிட்டு நினைவேந்தர் நிகழ்வுகள் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்று 21 சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குச்சவெளி  பொலீஸாரினால் இச்சிரமதானப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது இதன் போது அங்கு சென்ற பொதுமக்கள் முன்னாள் போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா.

கடந்த 12ம் திகதி சட்டரீதியாக ஆலங்குளம் துயிலுமில்ல சிரமதானப் பணிக்காக அனுமதிகள் பெற்று பிரதேச மக்களின் ஆதரவுடன் செயற்குழு அமைக்கப்பட்டு சிரமதானப் பணியை ஆரம்பித்துள்ளோம் தற்போது குச்சவெளி செம்பிமலை துயிலுமில்லத்திற்கு தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளது.

இச்செயற்பாடுகள் அனைத்தும் இந்த நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் கீழ் தான் நடைபெறுகின்றது நான் முன்பு கூறியது போல் சில இடங்களுக்கு அனுமதியும் சில இடங்களுங்கு அனுமதி மறுப்பும் இது எப்படி ஏற்றுக்கொள்வது  என ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றம் சுமத்துகின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக  தகுந்த ஆலோசனையின் பேரில் நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாகவும்  அவர்குறிப்பிட்டிருந்தார்.

 

By admin