கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்றுவரும் பாண்டிருப்பைச் சேர்ந்த மாணவன் திருச்செல்வம் வேணுசஜீத் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச கணித திறனாய்வு சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கதைதை பெற்றுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் கலந்துகொண்டிருந்தார். இவர் பாண்டிருப்பைச்சேர்ந்த திருச்செல்வம் மதிவதனி தம்பதியினரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எமது பிரதேசத்திற்கும், நாட்டுக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்த வேணுசஜீத்திற்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

By admin