உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தூண்டும் விதத்தில் வீதிநாடகமும், நடைப்பவணியும் கல்முனை நகரில் நேற்று நடத்தப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், பொது வைத்திய நிபுணர்கள் வைத்தியர் ஆர் ரமேஸ் ,வைத்தியர் என் இதயகுமார் ஆகியோரின் ஆலோசனையின் கீழ் சுகாதார கல்விப் பிரிவும், நிகழ்ச்சிப்பிரிவும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

மக்கள் நீரிழிவு நோயினால் எவ்வாறு பாதிப்பை எதிர்கொள்கின்றனர் , அதன் விளைவினால் ஏற்படும் விபரீதங்களை தத்ரூபமாக சித்தரிக்கும் விதத்தில் வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகள் போன்ற வேடங்களுடன் இவ் ஊர்வலம் நடைபெற்றது.

நடைபவணிக்கான ஒழுங்கமைப்பை இரத்த வங்கி வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் என் ரமேஸ் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து கலந்த கொண்டிருந்தார்.

படங்கள் – குமார். தில்லை

 

By admin