கொழும்பு கொட்டாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலை(NSBM) கூடைப்பந்தாட்ட அணியுடனான சினேகபூர்வ போட்டியில் காரைதீவு கூடைப்பந்தாட்ட அணி NSBM பாடசாலை உள்ளக விளையாட்டு அரங்கில் கலந்துகொண்டனர்.
வெகு விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் அரை பகுதியில் 44-33 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த காரைதீவு அணி முழுநேர முடிவில் 63-69 புள்ளிகள் அடிப்படையில் NSBM அணி காரைதீவு அணியை வெற்றிகொண்டது.
எனினும் காரைதீவு அணி வீரர்கள் சிறந்த திறமையை போட்டியில் வெளிப்படுத்தியிருந்ததோடு புதிய போட்டி அனுபவத்தினை  பெற்றுக்கொண்டனர்.
(காரைதீவு நிருபர் சகா)

By admin