அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும், வாசிப்பு அனுபவப்பகிர்வும், கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017)  ஞாயிற்றுக்கிழமை VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133)  மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” எனும் தலைப்பில் எழுத்தாளர்  . ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் உரையாற்றவுள்ளார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு  இந் நிகழ்ச்சியில் இம்முறை நான்கு நூல்கள் இடம்பெறுகின்றன.

வானத்தைப்பிளந்த கதை ( செழியன் எழுதியது) ஈழப்போராட்ட நாட்குறிப்பு – விமர்சனஉரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

நைல்நதிக்கரையோரம் ( நடேசன் எழுதியது) பயண இலக்கியம் – அறிமுகவுரை சாந்தி சிவக்குமார்.

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – (பெருமாள்முருகன் எழுதியது ) நாவல் – மதிப்பீட்டுரை : நடேசன்.

காட்டில் ஒரு மான் – (அம்பை எழுதியது) சிறுகதைத்தொகுப்பு அறிமுகவுரை: விஜி இராமச்சந்திரன்

கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

By admin