இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதி கட்சி பிரநிதிகளுக்கான கூட்டம் நேற்று மாலை ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் தொகுதிக்கான தலைவர் ரி.கண்ணதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் பொத்துவில் தொகுதிக்கான புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

தலைவராக A.கலாநேசன், செயலாளராக கே.இரத்னவேல், பொருளாளராக கே.தட்சணாமூர்த்தி தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் 14 பேர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகத் தெரிவானார்கள்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டன.

By admin