{காரைதீவு நிருபர் சகா)

கல்முனையையடுத்துள்ள சாய்ந்தமருதுக்கடலில் நேற்று (11) சனிக்கிழமை குளிக்கச்சென்று கடலில்மூழ்கியசமயம் காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப் (வயது 17) இன்னும் கிடைக்கவில்லையென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.தேடுதல் தொடர்கிறது (12) சனிக்கிழமை படகில் சென்று தேடுதல் வேட்டையலீடுபட்டனராயினும் இன்னும் கிடைக்கவில்லை.

நேற்று  பகல் ஆறு மாணவர்கள் சாய்ந்தமருது பீச்பார்க் (சீபிறிஸ் கோட்டல் முன்னாலுள்ள கடல்) அருகிலுள்ள கடலில் குளிக்கச்சென்றிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் கல்முனை சாஹிறாக்கல்லுரியில் க.பொ.த சா.தரம் பயிலுகின்ற மாணவர்களாவர். அதுமட்டுமல்ல இவர்கள் இம்முறை இன்னும் ஒரு மாதத்தில் டிசம்பரில் க.பொ.த. சா.த.பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

இவ் 6 மாணவர்களும் குளித்துக்கொண்டிருந்தவேளை கடல் உரமாகவிருந்ததால் அலகைள் சுழன்று அடித்திருக்கின்றன. சுழிஅலைகளும் தென்பட்டிருக்கின்றன.

அந்த வேளை இவர்களை அவ்வலைகள் சிதறடித்திருக்கின்றன. மூழ்கடித்திருக்கின்றன.

ஒருவாறாக இருவர் கரையேறி ஓடிவந்து கரையில் நின்ற மீனவர்களிடம்தெரிவித்ததும் அவர்கள் விரைந்து செயற்பட்டு கயிறு எறிந்து அதன்மூலம் மூவரைக்கரைக்குச்சேர்த்தனர்.

அவர்களில் இருவரின் நிலை மோசமாகப்போகவே இருவரையும்  அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருவரையும் அவசரசிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரு மாணவன் சிலமணிநேரத்தில் வெளியேறினார். மற்ற மாணவன் இன்னும் அதிதிவீரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

இன்று மாலையில் கூட அவர் பேசாதநிலையில் இருந்துள்ளார் எனத் தெரிகிறது.

ஆக ஆறாமவரான சஹாப்தீன் இன்சாப் எனும் மாணவனுக்கு என்னநேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தத்தகவலும் இல்லை.

சஹாப்தீன் ஒரு ரெயிலர். அவரது மகன் இன்சாப் கடைசிக்குமூத்த ஆண்பிள்ளை. . குடும்பத்தில் அறுவர் பிள்ளைகள். 3பெண்கள்.

குடும்பத்தவரால் கல்முனைப்பொலிசார் மற்றும் கடற்படைக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடும்ப அங்கத்தவர் சம்சுதீன் தெரிவித்தார்.

மாரிக் கடல் உரமாகவிருப்பதாலும் இருட்டாகிவிட்டதாலும் கடலில் தேடும் பணி இடம்பெறவில்லை.  பெற்றோர் உறவினர்கள் கடலைப்பார்த்துக்கொண்டு  கடற்கரையில் நின்றுகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

 

குறிப்பு -மாரிகாலம் கடல் எங்கும் கொந்தளிப்பாக உள்ளதால் கடலில் நீராடுவதை தவிர்ப்பது நன்று

By admin