மாகாணசபைக்கான அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவு தேசிய ஆணைக்குழு முன்னிலையில் கல்முனையில் இருந்து சென்ற தமிழ் தரப்பால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழிமூலமாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான துரைராஜசிங்கம் தலைமையில் கல்முனையில்  இருந்து சென்ற  தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் ஆகியோரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் அடங்கிய  குழு மாகாணசபை தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்மொழிவை சமர்ப்பித்திருந்தனர்.

By admin