(காரைதீவு நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தின் துயிலுமில்லமான கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னோடியாக நாளை ஓரு கூட்டம் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகளினதும் தமிழ்ப்பற்றாளர்களினதும்

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான கூட்டம் நாளை(12) ஞாயிற்றுக்கிழமை தாண்டியடியில் நடைபெறவுள்ளது.

இதற்கு அம்பாறை மாவட்டம் வாழ் மாவீரர் குடும்பங்கள் உள்ளிட்ட முன்னாள் போரளிகள் சகலரையும் கலந்துகொள்ளவருமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள்விடுத்துள்ளது.

தாண்டியடியிலுள்ள சங்குமன்கண்டியில் நாளை  காலை 11மணிக்கு இவ்ஏற்பாட்டுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கலந்துகொள்வோர் 0778093460 0756736533 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்

By admin