(பிரதீவன்)

பாண்டிருப்பு சலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய கிரிக்கட் போட்டியில் பாண்டிருப்பு காந்தி ஜீ அணியை எதிர்த்தாடிய கல்முனை டொல்பின் கழகம்  வெற்றி பெற்று வெற்றிக் கேடயத்தையும் பணப் பரிசையும் பெற்றுக்கொண்டுள்ளது.


8 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை டொல்பின் அணி  பெற்றிருந்தனர். வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடிய காந்தி ஜீ அணியினர் 8 ஓவர்கள் நிறைவில் 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 9 விக்கட்டுக்களை இழந்து தோல்வியைத் தழுவினர்.

இந்த போட்டியில் டொல்பின் அணி சார்பாக துஷாந்தன் 27 ஓட்டங்களையும், கஜன் 42 ஓட்டங்களையும், கரன் 14 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

 

இறுதிப் போட்டியின் வெற்றி கேடயம் பரிசில் வழங்கும் நிகழ்வில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் பிரபாகரன், கல்முனை சரவணாஸ் நகையக உரிமையாளர் லதன் மற்றும் கழகத் தலைவர் தா.பிரதீபன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்தச் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி முதல் திருக்கோவில் வரையுள்ள 32 முன்னணிக் கழகங்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin