(டினேஸ்)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் டொல்பீன் ரக வன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி விபத்தானது கல்லடி வேலூர் கொலணி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு செல்வதற்காக சுற்றுவட்டத்தை கடக்கமுட்பட்ட முச்சக்கரவண்டியினை காத்தாங்குடி பகுதியிலிருந்து பயணம் செய்த டொல்பீன் ரக வன் இடம் கொடுக்காமையினால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் வாகனங்கள் இரண்டும் சேதம் ஆகியுள்ளதுடன் மேற்படி விபத்து தொடர்பாக காத்தாங்குடி பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருவதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

By admin