தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் தேசிய ரீதியில் 6வது முறையாக நடைபெற்று முடிந்த குறும்பட மற்றும் ஆவணப்படப்போட்டியில் ஜோயலின் முதல் ஆவணப்படமான ”Butterflies” 3ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.

அவ் ஆவணப்படமானது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் படுகின்ற அல்லல்களைக்குறித்ததாகும்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவனான ஜோயலின் குறும்படங்கள் காத்திரமான சமூக விழிப்பூட்டும் கருத்துக்ளை தாங்கி வருகின்றமை சிறப்பாகும். இவரின் குறும்படங்கள் தேசிய ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளன.

 

 

By admin