சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாக உள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெறுகின்ற பாடல் ஒன்றுக்கு ஈழத்தின் நாதஸ்வர இளவரசர் பஞ்சமூர்த்தி குமரன் நாதஸ்வர இசை வழங்குகின்றார்.

படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் இவருக்கு இம்மகத்தான வாய்ப்பை வழங்கி உள்ளார்.

இது குறித்து இமான் முகநூலில் வெளியிட்ட பதிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே. பி. குமரனை அண்ணாத்த திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைப்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதே நேரம் இம்மகத்தான வாய்ப்புக்காக பெற்றோர், இறைவன் ஆகியோருக்கும் குமரன் நன்றி தெரிவித்து உள்ளார்.

இவர் நவராத்திரியில் பங்கேற்று இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் எடுத்து உள்ள புகைப்படங்கள் சக்கை போடுகின்றன.

இவர் பிரபல நாதஸ்வர மேதை வி. கே. பஞ்சமூர்த்தியின் புதல்வர் ஆவார்.