ஒரு தேங்காய்க்கு 75 ரூபா என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயிப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இந்தக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படலாம் என்று வாழ்க்கைச் செலவு குழு தெரிவித்துள்ளது.

தேங்காய் ஒன்று தற்போது 100 ரூபா முதல் 110 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காயின் அளவுக்கு ஏற்ப அதன் விலை சில பிரதேசங்களில் மாறுபட்டு விற்பனை செய்யப்படுகிறது.