-கிரிசாந் மகாதேவன்- 

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டில் பாடசாலைகள் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (21) ஆம் திகதி முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2 ஆம் கட்டமாக இன்றைய தினம் (25) தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் பாடசாலை க.பொ.த சாதாரண மாணவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை க.பொ.த சாதாரண மாணவர்கள் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு கட்டம் கட்டமாக செலுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் (25) ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தடுப்பூசி செலுத்த நாளைய தினம் செவ்வாக்கிழமை (26) பி.ப 2.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தவும்.

மேலும் நாளை மறுதினம் புதன்கிழமை (27) பி.ப 2.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை கோளாவில் விநாயகர் வித்தியாலயம் மற்றும் திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தவும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடானது சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற்றதுடன். மாணவர்கள் பாடசாலை சீருடைகளை அணிவது கட்டாயமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.