வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மாட்டுப்பாளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக சமூக சேவையாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டார்.

அவசர ஆலய பரிபாலனசபைக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பரிபாலன சபை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்ற போது இத்தெரிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.