மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயதலைவர் கோ.கமலநாதன் காலமானார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத் தலைவர் கோ.கமலநாதன் 68 ஆவது வயதில் நேற்று (21)வியாழன் காரைதீவில் காலமானார்.

பத்து வருடங்களுக்கு மேலாக மடத்தடி மீனாட்சிஅம்மன்ஆலயத்தின் தலைவராக இருந்து தொண்டாற்றியவர்.

ஆலயவளர்ச்சியில் அரும்பாடுபட்ட ஆலய தலைவர் கோ.கமலநாதன் புதிய ஆலயமொன்றை அமைத்து கும்பாபிசேகம் காணவிருந்தவேளையில் காலமாகியுள்ளமை வேதனையளிப்பதாக ஆலய உபதலைவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அனுதாபஅஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அன்னாரது பூதவுடல் இன்று (22)வெள்ளி காலை 10மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை இடம்பெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.