( நமது நிருபர் )
எதிர்வரும் வரவு – செலவு திட்டத்துக்கு முன்னதாக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்து உள்ளன.

பெரமுனவின் வியூகம் வகுப்பாளர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று மேற்கொள்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய கட்சியின் தேசிய பட்டியல் எம். பிகளை எதிர்வரும் 12 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ,அவரின் கொழும்பு இல்லத்தில் சந்தித்து பேசுகின்றார் என்று தெரிய வருகின்றது.

இதில் முக்கியமாக தேசிய பட்டியல் எம். பிகளில் சிலர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரப்பட உள்ளனர் என்றும் அறிய கிடைக்கின்றது.

மேலும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து பங்காளிக் கட்சி தலைவர்களை அழைத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி பசில் பேசுவார் என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரவு – செலவு திட்டத்துக்கு பிற்பாடு மாகாண சபை தேர்தல்களுக்கான வியூகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.