கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் மருதமுனையில் இரவோடு இரவாக அத்துமீறி கட்டிட நிர்மாணம் மேற்கொண்ட இருவர் வியாழக்கிழமை இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டனர்.

கடற்கரை வீதியில் 65 மீற்றர் எல்லைக்குள் கட்டிடம் கட்டுகின்ற முயற்சி திணைக்களத்தின் கல்முனை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து அதிரடியாக கல்முனை பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ( 08.10.2021) ஆஜராக்கப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டனர். கல்முனை நீதிவான் எம். எஸ். எம். சம்சுதீன் குற்றவாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இருவரையும் ஆதரித்து சட்டத்தரணிகளான அனோஜ் பிரதௌர்ஸ், ஹரீம் ரிஸ்கான் ஆகியோர் ஆஜரானார்கள்.