ஜே. கே. யதுர்ஷன்
அம்பாறை மாவட்டத்தில் கொவிட்19 தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயல் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதிப்பங்களிப்பினை கனடா நாட்டிலுள்ள” ரூ டீப்”நிறுவனமானது வழங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களான மண்டானை மற்றும் கஞ்சிகுடிச்சாற்று கிராமத்தில் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கேட்டுக்கொண்டமைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் நிவாரனப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் பரவலாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

இவ் நிகழ்வில் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதிசன் கலந்து கொண்டதுடன் மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் ,நிவாரணப்பணி ஒருங்கிணைப்பாளரும் சிரேஸ்ர ஊடகவியலாளருமான.வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட வர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

மேலும் இப் பணிகள் அந்தந்த பிரதேச செயலக அனுமதியுடன் முறைப்படி உரிய அதிகாரிகளை கொண்டு கடந்த காலங்களில் இடம் பெற்றதைப்போன்று நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.