ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் கடந்த 2021/10/04 ஆம் திகதி ஏற்பட்ட மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் மின்னல் தாக்கி மரணம்  அடைந்த சாகாமம் பாடசாலை வீதியை சேர்ந்த 6பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா என்பவரின் குடுபத்திற்கு ஆரம்ப கட்ட மரணச் செலவான அனர்த்த நிவாரண கொடுப்பனவினை அவரது பாரியாருக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் , உயிரிழந்தவரின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வானது நேற்று முன் தினம் சாகாமம் பகுதியில் இடம்பெற்றது.

திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா ,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜன்,பகுதி கிராம உத்தியோகத்தர் பார்த்தீபன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.