இன்று முதல் பால்மாக்களின் விலைகளில் மாற்றம்!

இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலைகள் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தமது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் இறக்குமதி பால் மா ஒரு கிலோ கிராம் 1,195 ரூபாவுக்கும் மற்றும் 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் மற்றும் உச்சபட்ச சில்லறை விலைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வரத்தமானிகளிலிருந்து அவற்றை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான பால் மா, முழு ஆடைப் பால் மா, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மா ஆகிய அனைத்து வகை பால் மாக்களும் குறித்த கட்டுப்பாட்டு விலைகள்/ நியமப் பொருட்கள்/ றிப்பிட்ட பொருட்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.