31 வருட கால ஆசிரியப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார் செல்வி.க.வசந்தி!


ஆசிரிய பணியில் 31 வருட காலம் சேவை செய்து 09.10.2021 இன்று தனது அறுபதாவது வயதுடன் ஓய்வு பெற்றார் செல்வி.க.வசந்தி ஆசிரியை.


கமு பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் பதினொரு வருட காலம் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நாவலர் வித்தியாலய பாடசாலை சமூகத்தால் கௌரவிப்பு நிகழ்வு சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றது.


இவ்வித்தியாலய அதிபர் க.தியாகராஜா இவ் ஆசிரியைக்கு நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். ஆசிரியை வசந்தி பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்திலும் 20 வருட காலம் சேவையாற்றி மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நன்மதிப்பைபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.