எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 15-19 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி – பிராந்திய பணிப்பாளர் டொக்டர் கு.சுகுணன்


நாடளாவியரீதியில் எதிர் வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் 15-19 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கான பைசர் ரக தடுப்பூசிகள் ஏற்றும் பணி அனைத்து வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.


அவர்களுக்கு ஒரு டோஸ் வக்ஸின் மட்டுமே கொடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 19 வயதுடையோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து 18 வயதினருக்கும் பின்னர் 17 வயதினருக்கும் 16, 15 என்று வழங்கப்பட்ட இருப்தாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.


15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைக்கு வழங்கும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் இன்று சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தெரிவித்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.