திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

-யதுர்ஷன்-

திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்டபட்ட சாகாமம் பாடசாலை வீதியை சேர்ந்த 52வயதுடைய 6பிள்ளைகளின் தந்தையான சாமிதம்பிமோகனராசா என்பவரே இவ் மின்னல் தாக்கலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
நான்காம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் மாலை வேளையில் இடம்பெற்ற மழையுடன் கூடியகாலநிலையால் ஏற்பட்ட மின்னல் தாக்கி இவர் சம்பவ இடந்திலே பலியாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸ்சாரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது..