ஆசிரியர் தினமான இன்று கல்முனையில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!


ஆசிரியர் அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று கல்முனை வலயக்கல்விப்பணிமனைக்கு முன்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்று கூடி ஆசிரியர் தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவைச்சங்க பிரதிநிதிகள் ,ஏனைய ஆசியர் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல ஆசியர்கள் அதிபர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.