இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், பால் மாவின் விலையை திருத்தம் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதுடன் இன்றைய தினம் அமைச்சரவையில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பால் மாவினை இன்று முதல் விடுதலை செய்யவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.