-கிரிசாந் மகாதேவன்-

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் (01/10/2021) வெள்ளிக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .வே .ஜெகதீசன்,காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறில்,மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் .ஜெயராஜ், ஆலய தாலைவர்,நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வில் ஆலய எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு நடத்துவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் தொடர்பாக கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக சிறந்த முறையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது.